தரவுகள் திருடப்பட்டால் எச்சரிக்கை விடுக்கும் இணைய உலாவி: எது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது இணையப் பாவனையானது பாதுகாப்பு அற்றதாக மாறியுள்ளது.

இதன்காரணமாக தனி நபர் தகவல்கள் திருடப்படும் அபாயம் உச்சத்தை எட்டியுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு Mozilla நிறுவனம் இணைப் பாவனையாளர்களை பாதுகாக்க புதிய யுக்தி ஒன்றினை தனது இணைய உலாவியில் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி கடவுச் சொற்கள் திருடப்படுதல் உட்பட ஏனைய தகவல் திருட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இப் புதிய வசதியானது Firefox 70 உலாவியில் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூடியூப் மற்றும் லிங்ட் இன் ஆகிய வலைத்தளங்களை ரகசியமாக கண்காணிப்பவர்களையும் தடை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்