விமானங்களில் பயணிப்பவர்களுக்கு Wi-Fi வசதி அறிமுகம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

விமானங்களில் பயணிக்கும்போது பொதுவாக கைப்பேசிகளை செயற்படு நிலையில் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும் தற்போது Wi-Fi சேவையின் ஊடாக கைப்பேசிகளில் இணையத்தினை பயன்படுத்தக்கூடிய வசதி அளிக்கப்படவுள்ளது.

இந்திய விமானங்களில் இவ் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் கைப்பேசியில் மாத்திரமன்றி லேப்டொப், டேப்லட், ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் e-Reader என்பவற்றினையும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இதன்படி Boeing 787-9 எனும் விமானமே இந்தியாவில் முதன் முறையாக Wi-Fi சேவையை அறிமுகம் செய்த விமானம் என்ற பெயரினைப் பெறவுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்