உலக அளவில் தற்போது உள்ள இணைய வேகத்தினை அதிகரிப்பது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.
5G இணையத் தொழில்நுட்பமானது பல நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையிலும் இந்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இப்படியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி அதிவேக இணையப் பரிமாற்ற வேக தொழில்நுட்பத்தினை பரிசோதித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அதாவது Netflix தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து வீடியோ கோப்புக்களையும் ஒரு செக்கனிலும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய அளவு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தினை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர்.
அதாவது இந்த வேகமானது ஒரு செக்கனுக்கு 178 ரெறாபிட்ஸ் ஆக காணப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள University College London ஆராய்ச்சியாளர் குழு ஒன்றே இச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதேவேளை முன்னர் நிகழ்த்தப்பட்ட சாதனை இணையப் பரிமாற்ற வேகத்தினை விடவும் இது 5 மடங்கு வேகம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.