உலகை வியக்க வைக்கும் 5G வலையமைப்பு வேகம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
16Shares

கடந்த வருடம் முதல் சில நாடுகளில் 5G மொபைல் வலையமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது 4G வலையமைப்பினை விடவும் பல மடங்கு வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது தென்கொரியாவில் 5G தொழில்நுட்பத்தின் வேகம் உச்ச பட்சமாக 691Mbps வேகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ் வலையமைப்பினால் உண்டாகும் கதிரியக்கம் காரணமாக உயிரினங்களுக்கு பல பாதிப்புக்கள் வரும் என எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இது ஒருபுறம் இருக்க அதிகூடிய வேகத்தில் இணைய இணைப்பினை பயன்படுத்துவதற்காக உலக மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இதனால் தொடர்ந்தும் 5G வலையமைப்பு தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்று வருவதுடன், ஒவ்வொரு நாடுகளிலும் விஸ்தரிக்கப்பட்டும் வருகின்றன.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்