தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Report Print V.T.Sahadevarajah in வேலைவாய்ப்பு
56Shares
56Shares
lankasrimarket.com

திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணக்களத்தின் கீழியங்கும் தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் பணியாற்ற வெளியக விரிவுரையாளர்களுக்கான மற்றும் போதனாசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 39 தொழில்நுட்பவியல் கல்லூரிகளில் பகுதி நேரம் பணியாற்ற இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் அல்லது அதிபர்களிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி 24.11.2017 ஆகும். தெரிவாகும் விரிவுரையாளர் ஒருவருக்கு மணித்தியாலயத்திற்கு 500 ருபா முதல் 1000 ருபா வரை கொடுப்பனவு வழங்கப்படும்.

இப்பதவி 2018ஆம் ஆண்டிற்கு மட்டும் உரியதாகும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.என்.கே.மளலசேகர அறிவித்துள்ளார். இதற்கான மேலதிக விபரங்களை 27.10.2017 இன்றைய வர்த்தமானியில் பார்க்கலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்