சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளும் மலையக இளைஞன்

Report Print Gokulan Gokulan in வேலைவாய்ப்பு

இந்தியா, கல்கத்தாவில் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற சர்வதேச இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து 12 பேர் கொண்ட குழாமினர் இந்தியா பயணமாகவுள்ளனர்.

குறித்த, குழுவில் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் இளைஞர் வலையமைப்பின் பிரதேச சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளருமான, பொகவந்தலாவ செப்பல்ட்டன் தோட்டத்தைச் சேர்ந்த கணேசன் இளையராஜா உள்ளடங்குகின்றார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒன்றிணைந்து இளைஞர் கழகங்களினூடாக பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், இளைஞர் கழக செயற்பாடுகளில் முன்மாதிரியாக திகழும் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச நிகழ்வுகளில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்