வெளிநாட்டு ஊழியர்களை ஓரங்கட்டிய ஓமன் நாடு

Report Print Thuyavan in வேலைவாய்ப்பு
173Shares
173Shares
ibctamil.com

ஓமனில் அடுத்த 6 மாதத்திற்கு ஊடகம், ஐடி, மார்கெட்டிங், இன்சூரன்ஸ் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புதிய தடையானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதன் மூலம் ஓமன் குடிமக்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓமன் நாட்டு அமைச்சர் அப்துல்லா அல் பக்ரி, ஓமனில் 60,000 வேலை இல்லா பட்டதாரிகள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே உள்நாட்டு ஊழியர்களை பணிக்கு நியமிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் 60 சதவீத வேலை வாய்ப்பினை பொதுத்துறை நிறுவனங்களில் அளிக்க உள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் தங்களது நாட்டின் மக்களைப் பணிக்கு எடுக்கும் போது ஊக்கத்தொகைகள் போன்றவற்றையும் அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

அத்துடன் வேலை கிடைக்காமல் இளம் தலைமுறையினர் துவண்டு போயுள்ளதாகவும், அதை முழுமையாகக் குறைப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடை என்பது குறைந்த காலம் மட்டுமே சாத்தியம் என்றும், ஓமனின் நீண்ட காலத் திட்டத்திற்கு இது சாத்தியப்படாது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஊழியர்களின் எண்ணிக்கையை பார்த்தால் வெளிநாட்டில் இருந்து 10,87,000 ஊழியர்கள் பணிபுரிவது தெரியவந்துள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்