வேலைவாய்ப்பு வசதியினை மேலும் விஸ்தரிப்பு செய்தது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in வேலைவாய்ப்பு
17Shares
17Shares
lankasrimarket.com

வேலை தேடுபவர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்தி உள்ளூரில் காணப்படுகின்ற வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி இவ் வசதியின் ஊடாகவே விரும்பிய வேலைக்கு விண்ணப்பித்துக்கொள்ளவும் முடியும்.

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட இவ் வசதியானது இதுவரை காலமும் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மாத்திரமே கிடைக்கக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் தற்போது மேலும் 40 நாடுகளில் இவ் வசதியினை விஸ்தரிப்பு செய்துள்ளது.

வெவ்வேறு நிறுவனங்கள் தமது பணியாள் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவும் பேஸ்புக்கின் ஊடாக விளம்பரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதன் அடிப்படையிலேயே இவ் வசதி விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பேஸ்புக் அப்பிளிக்கேஷன், மேசஞ்சர் என்பவற்றிலும் இவ் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்