குழந்தைகளுக்கு மூளை கோளாறுகளை ஏற்படுத்தும் சூழல் நச்சுக்கள்

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்
குழந்தைகளுக்கு மூளை கோளாறுகளை ஏற்படுத்தும் சூழல் நச்சுக்கள்

முதல் தடவையாக வெவ்வேறு துறைகளிலுள்ள விஞ்ஞானிகளும், நிபுணர்களும் ஒன்று சேர்ந்து, வளி, நீர், உணவு மற்றும் அன்றாட செயற்பாடுகளால் நச்சு இரசாயனங்களுக்கு குழந்தைகள் வெளிக்காட்டப்படுவதால் அது அவர்களில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி ஆராய்ந்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வில் லண்டனை சேர்ந்த 48 முன்னிலை விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள், சுகாதார வக்கீல்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் ஒருமித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் உடனடியாக இவ்வாறான நச்சுக்களுக்கு குழந்தைகள் வெளிக்காட்டப்படுதை குறைப்பதற்கான மற்றும் தற்போதைய, வருங்கால சந்ததியினரின் மூளை விருத்தியை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Organophosphate (OP), Polybrominated diphenyl ethers (PBDEs), polycyclic aromatic hydrocarbons (PAHs), Nitrogen dioxide, Mercury மற்றும் Lead போன்ற இவ்வகை நச்சுக்கள் குழந்தைகளின் கற்றல், நடத்தைகளில் பெரிதளவில் தாக்கத்தை செலுத்துவதாக சொல்லப்படுகிறது.

அதன் விளைவாக குழந்தைகளில் மன இறுக்கம், அறிவாற்றல் குறைவடைதல், அவதான குறைபாடு, கவனம் சிதறுதல் போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுவதாக அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இவ் அறிக்கை Environmental Health Perspectives எனும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments