குழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து?

Report Print Givitharan Givitharan in குழந்தைகள்
குழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து?

அதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெரியவர்களாகையில் குறைந்தளவு என்பு திணிவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வொன்று சொல்கிறது.

அதேபோன்று Osteoporosis, Bone breaks போன்ற நோய் நிலைமைகளுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கென பிள்ளைகளும், இளம் வயதினரும் 20 வயது வரை அவதானிக்கப்பட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 1000 பிள்ளைகளின் பெற்றோர்கள் தத்தமது பிள்ளைகள் TV உடன் செலவிடும் நேரத்தை கண்காணிக்க பணிக்கப்பட்டிருந்தது.

இங்கு 5, 8, 10, 14, 17 மற்றும் 20 வயதுடைய பிள்ளைகள் ஆராயப்பட்டிருந்தனர். அவர்களது 20ஆம் வயதில் X-ray scan மூலம் அவர்களின் எலும்பு மூலக அளவு துணியப்பட்டது.

இதன்போது அதிகளவு நேரம் TV உடன் செலவிடுபவர்கள் இளம் வயதை எட்டுகையில் குறைந்தளவு எலும்பு மூலக அளவு, திணிவை கொண்டிருந்தது இனங்காணப்பட்டது.

அதாவது TV பார்ப்பது உடல் ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்துவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். TV பார்க்கும் வேளைகளில் அதிகளவு அசைவில்லாது இருப்பதாலேயே இவ்வகை விளைவுகள் ஏற்படுவதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments