பிறந்த குழந்தை சரியாக தூங்க மாட்டுதா? இதோ சில டிப்ஸ்

Report Print Fathima Fathima in குழந்தைகள்
746Shares

பிறந்த குழந்தை விளையாடும் போதும், சிரிக்கும் போதும் பார்க்க அழகாக தான் இருக்கும்.

ஆனால் குழந்தைகள் இரவில் தூங்கவில்லை என்றால் அவ்வளவு தான், அக்குழந்தையின் அம்மாக்கும், அப்பாவுக்கும் தூக்கமே கிடையாது.

இரவில் குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது என்றே தெரியாமல் சில தாய்மார்கள் முழிப்பர்.

அப்படி இருக்கும் தாய்மார்களுக்கு இதோ சில டிப்ஸ்,

  • முதலில் குழந்தைகளை நீங்கள் வழக்கமான முறைக்கு பின்பற்ற வேண்டும்.
  • இரவில் குழந்தைகள் தூங்கும் முன் அவர்களுடன் விளையாட வேண்டும், அப்போது அவர்கள் கலைப்படைந்து தூங்குவர்.
  • குழந்தைகளுக்கு வயிறு முழுக்க உணவு கொடுக்க வேண்டும். நடுவில் பசிக்கு எழுந்தாலும், எதுவும் குழந்தையிடம் பேசாமல் உணவு கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகள் தூங்கும் அறையில் நீல நிற லைட்டுகள் பயன்படுத்த கூடாது, சிகப்பு நிற லைட்டுகளை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அன்னையின் கருவில் இருக்கும் போது குழந்தைகளுக்கு சிவப்பு நிறம் தான் தெரியும். சிகப்பு நிறம் இருந்தால் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வதோடு, நன்றாக உறங்குவர்.
  • எப்போதும் குழந்தைகளை ஒரே இடத்தில் படுக்கவைக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இது தூங்குவதற்கான இடம் என்று உணர்வார்கள்.
  • அதேபோல் குழந்தைகள் மேல் பயன்படுத்தும் துணியும் சுத்தமாக(Blanket) இருக்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments