குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுங்கள்!

Report Print Santhan in குழந்தைகள்
560Shares

பொதுவாகவே குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கும், இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இது அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது, இதற்காக பெற்றோர்கள் கடைகளில் விற்கும் சத்துமாவு வாங்கி கொடுப்பார்கள், ஆனால் இது தேவையில்லை.

இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது.

பொட்டுக்கடலை, சுண்டல், தானியங்கள், பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பாக ஒரே மாதிரியான உணவை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது, அது அவர்களுக்கு உணவின் மீதான வெறுப்பை அதிகரிக்கவே செய்யும்.

காய்கறிகள் என்றாலும் வித்தியாசமான சுவையுடன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்களை அப்படியே கொடுக்காமல் மில்க் ஷேக்குகள் செய்து கொடுக்கலாம்.

தினம் ஒரு முட்டை, வாரத்திற்கு இருமுறை கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாலை நேரங்களில் நொறுக்கு தீனிக்கு பதிலாக பயறு வகைகளை அவித்து கொடுக்கலாம்.

இவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் வித்தியாசமாக செய்து கொடுத்தாலே ஆரோக்கியமாக வளர்வார்கள்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments