நஞ்சுக்கொடி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

Report Print Printha in குழந்தைகள்

கருத்தரிக்கும் தன்மைக் கொண்ட ஒரு பெண்ணின் கருப்பைக்குள் தான் நஞ்சுக்கொடி உருவாகிறது.

கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கு அந்த நஞ்சுக்கொடி வழியாகத் தான் உணவு செல்கிறது.

குழந்தையின் தொப்புள் கொடி மூலமாக குழந்தையுடைய அந்த நஞ்சுக் கொடியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த தொப்புள் கொடியானது, பிறக்கும் குழந்தைக்கு உயிர்வழியாக உள்ளது.

இதனால் தான் அதன் வழியாக குழந்தை உயிர்த்திருக்க தேவையான காற்று, இரத்தம், உணவு, ஊட்டம் ஆகிய அனைத்தும் செல்கிறது.

குழந்தைக்கு, இத்தகைய சிறப்பான பணிகளைச் செய்யும் தொப்புள் கொடியானது, ஒரு அங்குலத்திற்கு குறைவாகவும், அதன் நீளம் ஒரு அடியாகவும் உள்ளது.

பின் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டிருக்கும் நஞ்சுக்கொடி , குழந்தை பிறக்கும் வரையில் மட்டுமே தேவைப்படுகிறது. அதன் பின் அது தேவையற்றதாக தள்ளப்படுகிறது.

குழந்தை பிறந்ததும் அதன் நஞ்சுக்கொடியை கத்தரிக்கோலைப் பயன்படுத்தி துண்டித்து விடுகிறார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா?

ஏனெனில், பிறந்த குழந்தைக்கு இனி நஞ்சுக்கொடி தேவையில்லை. ஏனெனில் உணவு, ஊட்டம், காற்று முதலியவற்றைக் குழந்தை தானாகவே பெற்றுக் கொள்கிறது.

மேலும் குழந்தை பிறந்ததும் நஞ்சுக்கொடியை துண்டிக்கும் போது, அந்த நஞ்சுக்கொடியில் எவ்வித நரம்புகளும் இல்லாததால், குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments