குழந்தையின் தொப்புள் கொடியில் ரத்தம் கசிகிறதா?

Report Print Printha in குழந்தைகள்

கருவில் உள்ள குழந்தை மற்றும் தாய்க்கு இடையே ஓர் இணைப்பை கொடுப்பது தொப்புள் கொடி.

தாயிடம் இருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவு ஆகியவை தொப்புள் கொடியின் மூலம் செல்கின்றது.

குழந்தை பிறந்தவுடன் தாயின் கர்ப்பப்பையோடு இணைந்திருக்கும் தொப்புள் கொடியை வெட்டி முனையில் முடிச்சு போடுவார்கள்.

அப்போது தொப்புள் கொடியில் காயம், ரத்தம் உறையாமல் அல்லது ரத்த உறைவதற்குத் தேவையான விட்டமின் போன்ற அத்தியாவசியச் சத்துக்கள் குறைவாக இருந்தால், தொப்புள் கொடியில் இருந்து ரத்தக்கசிவு பிரச்சனைகள் ஏற்படும்.

பிறந்த குழந்தையின் உடலில் நோய்க் கிருமிகள் பரவியிருந்தாலும், தொப்புள் கொடியில் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் தொப்புள் கொடியில் ரத்தம் கசிவு ஏற்படும்.

தொப்புள் கொடி இருந்த இடத்தில் மெல்லிய தோல் மூடாமல் இருந்தால், திசுவில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கும்.

சிகிச்சை

  • விட்டமின் போன்ற அத்தியாவசியச் சத்துகள் மிகுந்த உணவுப் பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

  • ரத்தம் கசியும் தொப்புள் பகுதியை ஆல்கஹாலில் மெல்லிய துணியை நனைத்து பலமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

  • கல் உப்பை மூலம் சொதசொதப்பாக இருக்கும் தொப்புள் பகுதியில் சிகிச்சை செய்தால் விரைவில் குணமாகும்.

குறிப்பு

தொப்புள் கொடியில் ரத்தக் கசிவு மிக அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்வது மிகவும் நல்லது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments