குழந்தைகள் முன் உடை மாற்றுவதால் ஏற்படும் விபரீதம்

Report Print Printha in குழந்தைகள்

பெற்றோர்கள், கவனக்குறைவினால் குழந்தைகள் முன் செய்யும் ஒருசில தவறுகள் தான் குழந்தைகளை சிறுவயதிலேயே வேறு பாதைகளுக்கு கொண்டு செல்கிறது.

அந்த வகையில் குழந்தைகள் முன் பெற்றோர்கள் உடை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.

குழந்தைகள் முன் உடை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

குழந்தைகள் முன் பெற்றோர்கள் உடை மாற்றுவதால், குழந்தைகள் அவர்களின் சிறு பருவத்திலேயே பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகின்றனர்.

பெற்றோர் செய்வதை அப்படியே செய்வதும், சிறிதளவு தெரிந்த விஷயங்களை ஆர்வத்தோடு தேடித் தெரிந்து கொள்ள ஆர்வமாகின்றார்கள். ஏனெனில் இது போன்ற உணர்வுகள் இளம் வயதினரிடம் இயல்பாக இருக்கக் கூடியது.

பெற்றோர்கள் குழந்தையின் முன் உடை மாற்றும் போது, அவர்கள் சிறு வயதிலேயே பெண்ணுடல் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். எனவே பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் ஆண், பெண் இருவருமே, அவர்கள் முன்பு உடை மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதில் இருந்தே குழந்தையின் முன்பு உடை மாற்றுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் முன் உடை மாற்றும் போது, நம்மை பார்க்கும் குழந்தைகளின் மனதில் அதிர்ச்சி ஏற்படும். ஆனால் அதை அவர்களால் வெளிப்படுத்த தெரியாது. அது அவர்களின் மனதில் பாலியல் குழப்பமாக தொடரக்கூடும்.

குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் சூழலில் இருந்தே பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக் கொள்வதால், பெற்றோர்கள் குழந்தைகளின் முன் குளிப்பது, உடுத்துவது மற்றும் மற்றவர்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்துவது போன்று உடைகள் அணிவது இது போன்ற தவறுகளை ஒருபோதும் செய்யக் கூடாது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments