குழந்தையை ரகசியமாக கண்காணிக்காதீர்கள்!

Report Print Printha in குழந்தைகள்

குழந்தைகளை பாதுகாத்து அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.

ஆனால் அதற்கு குழந்தைகளை ரகசியமாக எந்நேரமும் கண்காணித்து கொண்டிருப்பதால், அவர்களின் மனநிலை மற்றும் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்.

குழந்தைகளை ரகசியமாக கவனிப்பதால் ஏற்படும் தீமைகள்
  • அடிக்கடி குழந்தைகளை கண்காணித்து கொண்டே இருப்பதால், அவர்களுக்கு உங்கள் மீது ஓருவித அவநம்பிக்கையை உருவாகி, உங்களிடம் அனைத்து விஷயங்களையும் மறைக்க தொடங்கி விடுவார்கள்.
  • குழந்தைகளின் தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக கண்காணிப்பது அவர்களுக்கு தெரிந்தால், உங்கள் மீதுள்ள மரியாதையை இழக்கக் கூடும்.
  • பெற்றோர்கள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வந்தால், அவர்கள் உங்கள் மீது வன்முறையில் கூட இறங்க அதிக வாய்ப்புள்ளது.
  • குழந்தைகளின் சமூக வலைதளங்கள் மற்றும் போன்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருந்தால், அவர்கள் சமூகத்தை எதிர்நோக்கும் தைரியம் இல்லாமல், மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
  • எதற்கும் அடிபணியாமல் நான் செய்வது தான் சரி என்பது போல நடந்து கொண்டு அதிக கோபம் மற்றும் பிடிவாதமாக இருப்பார்கள். அதனால் பெற்றோர்களை பற்றி கவலை கொள்ளவே மாட்டார்கள்.
குறிப்பு

குழந்தைகள் தவறான வழிகளில் செல்வதை கண்டுபிடிக்க அவர்களை ரகசியமாக கண்காணிக்காமல், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தால், உங்களின் நம்பிக்கையை காப்பாற்ற நிச்சயம் அவர்கள் கடமைப்படுவார்கள்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments