குழந்தைகளுக்கு எப்போது திடமான உணவுகளை கொடுக்கலாம்?

Report Print Printha in குழந்தைகள்

தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சில திட உணவுகளையும் கொடுக்கலாம்.

ஆனால் அப்படி குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்கும் போது, அதில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுக்கலாம்?

குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.

குழந்தைகளின் வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அது திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்.

குழந்தை பிறக்கும் போது இருந்த உடல் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால், அப்போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு என்னென்ன திட உணவுகள் கொடுக்கலாம்?
  • உருளைக் கிழங்கை நன்கு மென்மையாக மசித்து, விரலால் குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம்.
  • நன்கு கனிந்த வாழைப் பழத்தை மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதில் உள்ள இனிப்புச் சுவையால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.
  • குழந்தைகளுக்கு முதன் முதலாக ஆப்பிள் பழத்தைக் கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • குழந்தைகளுக்கு சால்மன் மீன் கொடுப்பது மிகவும் சிறந்தது. பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒருமுறை கொடுத்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
  • குழந்தைகளுக்கு நன்கு வேகவைத்த முட்டையை வாரம் இரண்டு முறைகள் கொடுக்கலாம். இதனால் குழந்தையின் உடல் வளர்ச்சி வலுமையாகும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments