குழந்தைகள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்களா?

Report Print Jayapradha in குழந்தைகள்

பொதுவாக நான்கு முதல் எட்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமாக மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள்.

குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் வயிற்றில் நோய்த்தொற்றுகள் போன்றவைகள் தான்

எனவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வந்தால் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் வைத்து எப்படி குணப்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேன்

தேன் மலச்சிக்கலை போக்க சிறந்த பொருளாகும். மேலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைக்கு 1-2 டேபிள் ஸ்பூன் தேன் கொடுத்து வந்தால் மலச்சிக்கல் விரைவில் குணமாகும்.

காய்கறிகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் அதிகம் சேர்த்தால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

ஆளிவிதைகள்

சிறிதளவு ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுப்பதின் மூலம் மலச்சிக்கலை விரைவில் சரிசெய்யலாம்.

விளக்கெண்ணெய்

பொதுவாக விளக்கெண்ணெய் நன்கு ஜீரணமாக பெரிதும் உதவுகின்றது. மேலும் ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதின் மூலம் மலச்சிக்கல் உடனே குணமாகும்.

தண்ணீர்

மலச்சிக்கலை பிரச்சனை வரமால் இருக்க வேண்டும் எனில் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே போதும். எனவே குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க கொடுப்பது மிகவும் நல்லது.

வாழைப்பழம்

மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பது வாழைப்பழம். மேலும் தினமும் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை ஒரு டம்ளர் சூடான பாலுடன் சேர்த்து கொடுத்தால் மலசிக்கல் பிரச்சனை வரவே வராது.

ஓமம்

வீட்டு சமையல் அறையில் உள்ள ஓமம் பல நன்மைகளை தர கூடியது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து, மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் உடனே குணமாகும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers