குழந்தைகள் விரும்பும் பொம்மைகளில் எது அவர்களுக்கு சிறந்தது...?

Report Print Abisha in குழந்தைகள்

குழந்தைகள் அதிகம் விரும்புவது பொம்மைகளை தான். பொம்மைகளிடம் பேசுவது, கொஞ்சுவது, மாணவராக்கி பாடம் சொல்லி கொடுப்பது என்று அவர்கள் அதனோடு மட்டும் பயணிக்கின்றனர். அத்தகைய பொம்மைகளில் எந்த வயதில் எந்த பொம்மை சிறந்தது என்று பார்க்கலாம்.

6 மாத வரையில் குழந்தைகள், அவர்கள் அருகில் வருபவர்களின் கண்களை விரும்பி பார்த்து கொண்டே இருப்பர். எனவே அவர்களுக்கு பெரிய பொம்மைகள் வாங்கி தரலாம். மேலும் அதிகம் வர்ணங்களை விரும்புவார்கள் எனவே அதற்கு ஏற்றார்போல் நல்ல நிறமி உள்ள பொம்மை வாங்கி தரலாம்.

குறிப்பாக குழந்தைகளுக்கு சிறிய பொருட்கள் வாங்கி தரக்கூடாது அவர்கள் வாயில் வைத்து சப்ப நேரிடும்.

1 வயது வரை குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள் அவர்களுக்கு, தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி தரலாம் அது அவர்களை அதிகம் விளையாட செய்யும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்