பெற்றோர்களே! மறந்தும் கூட குழந்தைக்கு ஒரு வயது வரை இந்த உணவுகளை கொடுத்து விடாதீங்க.... ஆபத்தாம்!

Report Print Kavitha in குழந்தைகள்

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாக கருதப்படுகின்றது.

குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்கள் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அந்தவகையில் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை என்னென்ன உணவுகள் எல்லாம் கொடுக்க கூடாது என்பதை பார்ப்போம்.

பால்

மாட்டின் பால் அல்லது சோயா பால் போன்றவை குழந்தைகளுக்கு செரிமானமாவது சிரமம் ஆகும்.

மேலும் இந்த பால்களில் உள்ள புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அதுமட்டுமின்றி சில குழந்தைகளுக்கு லேக்டோஸ் அலர்ஜி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இது குழந்தைக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும் . எனவே நீங்கள் தாய்ப்பாலை பாட்டில் கொடுக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது.

திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிகமான அமில தன்மை உள்ளதால் இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.

தேன்

தேன் பாக்டீரியாக்களின் ஆதாரமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகின்றது.

அதேபோல மற்ற திரவ இனிப்புகளும் கூட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல.

திரவ இனிப்புக்கள் , மாப்பிள் சிரப் போன்றவையும் ஒரே மாதிரியான பிரச்னையை தான் குழந்தைக்கு தருகின்றது.

பினட்பட்டர்

இது நிலக்கடலையில் இருந்து பெறப்படுவதாகும். இது குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது.

எனவே இவை எல்லாம் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.

சில காய்கறிகள்

கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஒரு வயது குழந்தைக்கு ஆபத்தானது ஆகும்.

இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

உப்பு

குழந்தைகளுக்கு ஒரே ஒரு கிராம் உப்பு என்பது ஒரு நாளைக்கு போதுமானதாக உள்ளது.

உங்களது தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான உப்பு இருக்கிறது. எனவே உப்பு கலந்த எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

நட்ஸ்

பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.இவை அலர்ஜியை உண்டாக்க கூடியதாகும்.

நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை கூட குழந்தைகளுக்கு கொடுக்கும். எனவெ எக்காரணத்தை கொண்டும் இது போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

சாக்லேட்

சாக்லேட்டின் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

இது மட்டுமல்ல பால் பொருட்களும் குழந்தைகளுக்கு சேராது. எனவே இவற்றை கொடுப்பதை குழந்தைக்கு கொடுப்பதை தவர்க்கவும்.

பாப் கார்ன்

இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். 12 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு பாப்கார்ன் கொடுக்க வேண்டாம்.

முட்டை

முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜியை கொடுக்க கூடியதாக உள்ளது.

எனவே குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் முழுமையாக முட்டையின் வெள்ளைக்கருவை நீக்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers