குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை வருமா? காரணம் என்ன?

Report Print Kavitha in குழந்தைகள்

சர்க்கரை நோய்முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய் என்று இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் முதல் வகை நீரிழிவு நோயை சிறார் வகை நீரிழிவு நோய் என்றும் அழைக்கப்படுகின்றது.

ஏனென்றால் இந்த வகை நோய் பெரும்பாலும் சிறார்களையே தாக்கும். இது 5 வயதுக்கு பிறகு தோன்றும் எனப்படுகின்றது.

குழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகிறது?

இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகத் தோன்றுகிறது. இது உடலில் பொதுவாக இன்சுலின் உருவாக்கும் செல்களைத் தாக்கி அழிக்கிறது.

பரம்பரை மூலமாக் சர்க்கரை நோய் வருவது என்பது குறைவான சதவீதம் மட்டுமே என்கிறார்கள் மருத்துவர்கள்.

முதல் வகை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்
 • அடிக்கடி சிறுநீர் கழிப்பது
 • அதீத தாகம் எடுத்தல்
 • அதீத பசி எடுத்தல்
 • உடல் எடை குறைவு
 • உடல் சோர்வு
 • சுவாசிப்பதில் சிரமம்
 • ஈஸ்ட் தொற்றுகள்
 • திடீரென வித்தியாசமாக நடந்துகொள்ளுதல்
 • கனமான சுவாசம்
 • சுவாசிக்கும் போது முணுமுணுப்பது
 • பழங்கள், இனிப்பு, மது போன்ற வாசனையை நுகர்தல்
 • அதிக மயக்கம்
 • ஆற்றல் இல்லாமை
சர்க்கரையின் அளவு குறையும் போது ஏற்படும் அறிகுறிகள் ?

குழந்தைக்கு ஏற்கனவே முதல் வகை சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டால், இரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளாலாம்.

மங்கலான அல்லது இரட்டை பார்வை,தலைச்சுற்றல் மற்றும் தலைவலி , மயக்கம் அல்லது சோர்வு ,வியர்த்தல் ,ஈரமான தோல் ,தீவிர அல்லது திடீர் பசி ,பலவீனம்,விரைவான துடிப்பு போன்றவை

சிகிச்சை என்ன?

கணையத்தால் இன்சுலின் சுரக்காத போது உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியில் இருந்து செலுத்த வேண்டும். இந்த பாதிப்பு இருந்தால் மாத்திரைகளுடன் ஊசியும் பரிந்துரைக்கப்படும்.

இன்சுலின் அளவுகள் இரத்த சர்க்கரை அளவை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவற்றின் இரத்த சர்க்கரை அளவுகள், உணவுகள் மற்றும் செயல்பாட்டு நிலைகளையும் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்