கூகுள் அறிமுகம் செய்யும் அதிநவீன கமெரா

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
127Shares
127Shares
Seylon Bank Promotion

கூகுள் நிறுவனம் அண்மைக்காலமாக பல இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இவற்றின் வரிசையில் தற்போது Google Clips எனப்படும் நவீன கமெரா ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கமெராவானது மிகவும் பாரம் குறைந்ததாகவும், கையடக்கம் உடையதாகவும் இருக்கின்றது.

குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை கண்காணிக்க மிகவும் பயனுள்ளதாக இவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை விசேட அப்பிளிக்கேஷன் ஊடாக iOS மற்றும் Android சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

முதன் முறையாக அமெரிக்காவில் இக் கமெரா அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் விலையானது 249 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்