சோனியின் அசத்தும் ஐபோ ரோபோ அறிமுகம்

Report Print Kabilan in அறிமுகம்

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோ எனும் ரோபோ நாய்க்குட்டி அனைவரையும் கவர்ந்துள்ளது.

கேட்ஜட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சோனி நிறுவனம், தற்போது ரோபோ தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஐபோ ரோபோ நாய்க்குட்டி அதன் உரிமையாளரிடம் அன்பாக பழகும், எப்போதும் உற்சாகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

22 இணைப்புகளை கொண்ட இந்த நாய்க்குட்டி சாதாரண நாயைப் போலவே வால் ஆட்டுவது, செல்லமாக குரைப்பது, தூங்குவது போன்ற பாவனைகளை செய்யுமாம்.

இதன் OLED கண்கள் பல விதமான உணர்ச்சிகளுக்கு ஏற்ப மாறுமாம். இந்த ரோபோவை மூன்று மணிநேரம் சார்ஜ் செய்ய வேண்டும். இது இரண்டு மணிநேரம் இயங்கக் கூடியது.

இதனுடன் பயன்படுத்த My Aibo என்ற அப்ளிகேஷனும் உள்ளது.

ஜப்பானில் இந்த ரோபோவின் விற்பனைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளது. ஜனவரி 11ம் திகதி முதல் விற்பனைக்கு வர உள்ள இதன் விலை 1,98,000 யென் ஆகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...