அறிமுகமாகியது Panasonic P100 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
21Shares
21Shares
ibctamil.com

P100 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை Panasonic நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Quad Core MediaTek MT6737 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 128GB வரைக்கும் அதிகரிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 2200 mAh மின்கலம் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியானது நீரம், கறுப்பு, பொன் மற்றும் நரை நிறங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்