பூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம் : SpaceX நிறுவனத்தின் பிரமிப்பூட்டும் திட்டம்

Report Print Athavan in அறிமுகம்
396Shares
396Shares
lankasrimarket.com

பூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு விமானத்தில் பறந்து பயணிக்கும் நாம் இன்னும் சில ஆண்டுகளில் ராக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் சாத்தியமாக வாய்ப்புள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு செல்லும் மனிதர்களின் பயணத்துக்குப் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளை பயன்படுத்தலாம் என்றும், விமானங்களில் எகானமி வகுப்புக்கான செலவில் இதை நடைமுறைப்படுத்தலாம் என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.

நியூயார்க் - ஷாங்காய் இடையே விமானத்தில் சென்றால் 15 மணி நேரம் ஆகும், ஆனால் இந்த ராக்கெட் பயணத்தின் மூலம் வெறும் 39 நிமிடங்களாக இந்த பயணம் குறையும் என்றும் இதற்கான கிராபிக்ஸ் வீடியோவையும் வெளியிட்டிருந்தது.

ராக்கெட் மூலம் உலகின் முக்கிய நகரங்களிடையே அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள்ளாக பயணிக்க முடியும் என ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருந்தது.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் திட்டம் சாத்தியமாகும் வாய்ப்புகள் உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி க Gwynne Shotwell நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்