விரைவில் அறிமுகமாகின்றது சாம்சங்கின் 8K தொலைக்காட்சி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

வரும் அக்டோபரிலிருந்து லண்டனில் விற்பனைக்கு வருகிறது சாம்சங் Q900R 8K தொலைக்காட்சி.

இது இந்த ஆண்டு பேர்லினில் நடைபெற்ற IFA தொழில்நுட்பக் கண்காட்சியில் வெளியிடப்பட்டிருந்தது.

இத் தொலைக்காட்சிப்பெட்டியானது "65 தொடக்கம் 85" வரையில் நான்கு அளவுகளில் வெளிவரவிருக்கின்றது.

இதன் எல்லா மொடல்களும் பாவனையிலில்லாத போது சுவரினுள் மறைக்கப்படும் "அம்பியென்ற் மூட்" தொழில்நுட்பத்துடன் வருகிறது.

இதன் ஸ்கிரீன் ரெசலூசன் 8K, இதனால் மிக கூர்மையாக ஒளிப்படங்களைப் காட்சிப்படுத்த முடியும்.

சாதாரணமாக முழு HD தொலைக்காட்சிகள் கிட்டத்தட்ட 2 மில்லியன் பிக்சல்களைக் கொண்டிருக்கும்.

4K தொலைக்காட்சிகள் HD இலும் நான்கு மடங்கான பிக்சல்களைக் கொண்டிருக்கும்.

தற்போது சாம்சங் வெளியிடும் இவ் 8K தொலைக்காட்சியானது கிட்டத்தட்ட 33 மில்லியன் பிக்சல்களைக் கொண்டிருக்கும்.

எனவே இது எவ்வளவு தெளிவான திரைப்படங்களைக் காட்டப்போகின்றது என இப்போது உங்களால் ஊகிக்க முடியும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers