வெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவர்களின் ரசனையை மேலும் அதிகரிக்கும் வகையில் iMicro எனும் புதிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது பொருட்களை துல்லியமாக உருப்பெருப்பித்து காண்பிக்கக்கூடியது.

அதாவது சுமார் 800 தடவைகள் பொருட்களை உருப்பெருப்பிக்கக்கூடியது.

ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இலகுவாக இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதி அளவே உள்ள இச் சாதனமானது 30 டொலர்கள் பெறுமதி வாய்ந்ததாகும்.

தற்போது நிதி திரட்டும் நோக்கத்தில் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள iMicro சாதனம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...