உலகின் முதல் ரோபோ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்த நாடு

Report Print Kabilan in அறிமுகம்

சீனாவில் சின்ஹுவா என்ற செய்தி ஊடகம், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் சீனாவில் உள்ள சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம், சோகோவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வ்யூஜென் இல் நடைபெற்ற உலக இணைய மாநாடு விழாவில், A.I(ரோபோ) செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது.

பார்ப்பதற்கு நிஜ மனிதன் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த A.I செய்தி தொகுப்பாளர், மனிதர்களை போன்ற பாவனையில் செய்திகளை வாசிப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சின்ஹூவா நிறுவனத்தின் செய்தி தொகுப்பாளர் ஒருவரின் உருவம் மற்றும் அவரது குரல் வளம், ஆகியவை இந்த A.I செய்தி தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தானாகவே ஊடகத்தில் இருந்து செய்திகளை எடுத்து வாசிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

இந்நிலையில் இந்த A.I செய்தி தொகுப்பாளர், இடைவேளை இல்லாமல் தொடர்ந்து 24 மணிநேரமும் செய்திகளை தொகுத்து வழங்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இது போன்ற ரோபோக்களினால் எதிர்காலத்தில் பலர் வேலையை இழக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்