குறைந்த விலையில் அறிமுகமாகும் Apple TV சாதனம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஆப்பிள் நிறுவனமானது குறைந்த விலையில் Apple TV பதிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதுள்ள Apple TV சாதனமானது 179 டொலர்களாக காணப்படுகின்றது.

எனவே குறைந்த விலையில் அமேஷானின் Fire Stick போன்ற சிறியதொரு சாதனத்தினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

அதிகளவான மக்களை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டே இவ்வாறு குறைந்த விலையிலான Apple TV சேவையினை வழங்க முன்வந்துள்ளதுடன் இதற்கான பணிகளிலும் இறங்கியுள்ளது.

அமேஷான் Fire Stick மற்றும் கூகுளின் குரோம் காஸ்ட் என்பவற்றிற்கான சானங்கள் முறையே 39.99 டொலர்களுக்கும், 35 டொலர்களுக்கும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே ஆப்பிளின் புதிய திட்டமானது இவ்விரு நிறுவனங்களுக்கும் பலத்த போட்டியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers