Dog Lenses எனும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஸ்னாப் சட்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஸ்னாப் சட் செயலியில் இவ் வருட ஆரம்பத்தில் செல்லப் பிராணிகளான பூனைகளுக்கு பயன்படுத்தக்கூடிய லென்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது Dog Lenses மற்றுமொரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

இவ் வசதியைப் பயன்படுத்தி செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை புகைப்படங்கள் எடுக்கும்போது அவை விதம் விதமான கண்ணாடி அணிந்திருப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த முடியும்.

கண்ணாடிகள் தவிர்ந்த வேறும் பல பில்டர்கள் தரப்பட்டுள்ளன.

ஸ்னாப் சட்டில் லென்ஸ் வசதிகள் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை.

அத்துடன் இந்திய அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் இந்திய பயனர்களுக்காக இந்தியாவை மையப்படுத்திய மேலும் பல லென்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டியை மையப்படுத்திய லென்ஸ்களும் ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ஸ்னாப் சட்டில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers