மடிக்கக்கூடிய 5G கைப்பேசியினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் ஹுவாவி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

சீனாவை தளமாகக் கொண்ட ஹுவாவி நிறுவனம் உலகத்தரம்வாய்ந்த கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

தற்போது இந்த நிறுவனம் மடிக்கக்கூடியதும், 5G இணைய வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான கைப்பேசியை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என 24 ஆம் திகதி இடம்பெற்ற Mobile World Congress நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இடம்பெற்றுள்ளது.

Xiaomi நிறுவனம் மூன்றாக மடிக்கக்கூடிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி ஓரிரு தினத்தில் ஹுவாவி நிறுவனத்தின் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசியில் ஹுவாவி நிறுவனத்தின் Kirin 980 Processor, 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட Balong 5000 மொடமும் தரப்படவுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers