8ஜிபி ரேம் உடன் வெளிவந்த ASUS ஜென்புக் 14

Report Print Abisha in அறிமுகம்

ASUS நிறுவனம் சிறந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை அண்மையில் அதிகளவு அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.

ASUS ஜென்புக் 14 லேப்டாப் விலையைப் பொறுத்தவரை ரூ.74,990-ஆக உள்ளது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த சிறப்பான அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் சிறப்பம்சங்கள்

  • பெசல்-லெஸ் வடிவமைப்பு ASUS ஜென்புக் 14 லேப்டாப் பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.19கிலோ எடைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று மிக அருமையாக பயன்படுத்த முடியும்.
  • பின்பு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக், பேட்டரி இன்டிகேட்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
  • ASUS ஜென்புக் 14 லேப்டாப் சாதனத்தில் பேக்லைட் கீபோரட் மற்றும் அசத்தலான டிராக்பேட் வசதியும் உள்ளது. இந்த அம்சங்கள் வீடியோ எடிட்டிங், மற்றும் பல்வேறு ஆன்லைன் வேலைகளுக்கு மிக அருமையாக செயல்படும்.
  • ASUS ஜென்புக் 14 லேப்டாப் பொறுத்தவரை இன்டெல் கோர் ஐ7 செயலி யுஎச்டி கிராபிக்ஸ் 620ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, அதேபோன்று 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது
  • ASUS ஜென்புக் 14 லேப்டாப் மாடலில் 50வாட் லித்தியம் பேட்டரி இடம்பெற்றுள்ளது, இது சுமார் 4மணி நேரம் பேட்டரி பேக்அப் கொடுக்கிறது.
  • ஜென்புக் 14 லேப்டாப் சாதனம் பொதுவாக 14-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் மற்றும் 92 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்