5G தொழில்நுட்பம் கொண்ட Samsung Galaxy S10 அறிமுகமாகும் திகதி வெளியானது

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் சாம்சுங் நிறுவனமானது வருடம் தோறும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு போட்டியாக கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் வரிசையில் Galaxy S10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இவ்வருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இக்கைப்பேசியானது சாம்சுங் நிறுவனத்தின் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட முதலாவது கைப்பேசியாக இருக்கின்றமையினால் பாரிய வரவேற்பும் காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படுகின்ற திகதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைப்பேசியானது 6.7 அங்குல அளவுடைய தொடுதிரை, Snapdragon 855 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, தலா 12 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும் இக்கைப்பேசியின் விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers