உலகின் முதலாவது 5G தொடர்பு சாதனத்தினை அறிமுகம் செய்கின்றது ஹுவாவி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

அதிவேக மொபைல் மற்றும் இணைய வலையமைப்பு தொழில்நுட்பமான 5G தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இத்தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சீனாவினை தளமாகக் கொண்ட ஹுவாவி நிறுவனமானது 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட முதலாவது துணைச் சாதனம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இச்சாதனமானது கார்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் புதிய சாதனமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சீனாவின் ஷங்காயில் இடம்பெறவுள்ள வாகனக் கண்காட்சியில் குறித்த புதிய சாதனம் அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers