தனது மற்றுமொரு அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதியினை அறிமுகம் செய்கிறது கூகுள்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

பயனர்களின் கண் பார்வைக்கு சௌகரியமாக இருக்கக்கூடிய வகையில் பல அப்பிளிக்கேஷன்கள் மற்றும் இணையத்தளங்களில் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

கூகுள் நிறுவனமும் தனது அப்பிளிக்கேஷன்களிலும், குரோம் உலாவியிலும் இவ் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள் கலண்டர் அப்பிளிக்கேஷனினும் குறித்த Dark Mode வசதியினை தற்போது வழங்கியுள்ளது.

இதனை செயற்படுத்துவதற்கு கலண்டர் அப்பிளிக்கேஷனை திறந்து Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

அதன் பின்னர் General Theme எனும் பகுதியில் தரப்பட்டுள்ள Dark Mode இனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது Dark Mode வசதி செயற்பட ஆரம்பித்துவிடும்.

மீண்டும் தேவைப்படின் இதே படிமுறையில் Light Mode வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்