2019 ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களின் மொடல் இலக்கங்கள் கசிந்தன

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் வருடம் தோறும் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவ் வருடமும் ஒன்றிற்கு மேற்பட்ட ஐபோன் வகைகளை அறிமுகம் செய்யவுள்ளது.

அனேகமாக அவை iPhone XR, iPhone XS மற்றும் iPhone XS Max எனும் 3 கைப்பேசிகளாக இருக்கலாம் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவ்வாறு வெளியிடப்படும் கைப்பேசிகளுக்கான மொடல் இலக்கங்களும் தற்போது கசிந்துள்ளன.

 • A2111
 • A2160
 • A2161
 • A2215
 • A2216
 • A2217
 • A2218
 • A2219
 • A2220
 • A2221
 • A2223

ஆகிய இலக்கங்களே அவையாகும்.

ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளுக்கான மொடல் இலக்கங்களை Eurasian Economic Commission இல் பதிவு செய்து அனுமதி பெற்று வருகின்றமை வழக்கமாகும்.

இதற்கிணங்கவே மேற்கண்ட இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்