5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் முதலாவது ZTE ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

சீனாவை தளமாகக் கொண்டு செயற்படும் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் ZTE நிறுவனமும் ஒன்றாகும்.

இந்நிறுவனம் தனது முதலாவது 5G ஸ்மார்ட் கைப்பேசியினை ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இதனை அடுத்து சீனாவில் அறிமுகம் செய்வதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது.

எனவே குறித்த கைப்பேசி விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The ZTE Axon 10 Pro எனும் குறித்த கைப்பேசியானது இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ளது.

இவற்றில் ஒன்று 5G தொழில்நுட்பம் இன்றியும் மற்றொன்று 5G தொழில்நுட்பத்துடனும் அறிமுகமாகவுள்ளது.

5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசியின் விலை 599 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers