அறிமுகமாகியது Samsung Galaxy A80 ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

சுாம்சுங் நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy A80 இனை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

தற்போது இக் கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்காக முன்பதிவுகளை செய்துகொள்ள முடியும்.

எனினும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் நாடாளவிய ரீதியில் பிரதான விற்பனையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் பிரதான நினைவகமாக 8GB RAM, 128GB சேமிப்பு நினைவகம், 3700 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 48 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்பி கமெரா, மற்றுமொரு முப்பரிமாண கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 696 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்