அனைவரும் எதிர்பார்த்திருந்த WhatsApp Pay எப்போது அறிமுகமாகின்றது? இதோ புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஒன்லைன் ஊடான பணப்பரிமாற்ற சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த வருடமே வாட்ஸ் அப் அறிவித்திருந்தது.

இதனை அதிகளவான பயனர்களைக் கொண்ட இந்தியாவிலேயே அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் பயனர்களின் பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி இதற்கான அனுமதியை வழங்குவதில் இந்திய அரசு தயக்கம் காட்டி வந்தது.

ஆனாலும் இது தொடர்பாக ஆய்வுகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து வந்தது இந்திய அரசு.

இப்படியிருக்கையில் இந்த வருட இறுதிக்குள் குறித்த வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் 1.5 பில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப் இந்தியாவில் மாத்திரம் 400 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே முதலில் இந்திய அளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதன் பின்னர் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்.

இதேவேளை கடந்த வருடம் இவ் வசதி இந்தியாவில் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்