புதிய ஸ்மார்ட் கைப்பேசியை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்தது Motorola

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Motorola தனது புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

Motorola One Zoom என அழைக்கப்படும் இக் கைப்பேசியானது 6.38 அங்குல அளவுடையதும், 2340 x 1080 Pixel Resolution உடையதுமான Full HD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 675 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 48 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கமெராக்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 25 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா ஒன்றும் தரப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இக் கைப்பேசி விற்பனைக்கு வந்துள்ள நிலையில் விலையானது அமெரிக்காவில் 449 டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்தில் 379 பவுண்ட்ஸ்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்