ஹேம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

வீடியோ ஹேம் அதிகமாக விளையாடுபவர்கள் பெரிதும் விரும்புவது பிளே ஸ்டேசன் சாதனத்தைத் தான்.

சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படும் பிளே ஸ்டேசனுக்கு உலக அளவில் அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

இதுவரை அடுத்தடுத்து நான்கு வகையான பிளே ஸ்டேசன்களை சோனி அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான பிளே ஸ்டேசன் 5 இனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை அண்மித்த நாட்களில் இப் புதிய பிளே ஸ்டேசன் உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதில் Solid State Drive எனப்படும் திண்ம நிலை சேமிப்பு சாதனம் பயன்படுத்தப்படவுள்ளது.

இது வேகம் கூடிய சேமிப்பு சாதனம் என்பதால் ஹேம்களை விரைவாக பூட் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்