TikTok இன் பிரதான நிறுவனம் தனது முதலாவது கைப்பேசியினை அறிமுகம் செய்தது

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

உலகளவில் பிரபல்யம் வாய்ந்த வீடியோ சமூகவலைத்தளமாக TikTok காணப்படுகின்றது.

இந்நிறுவனமானது ByteDance எனப்படும் சீன நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இவ்வாறான ByteDance நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காலடி பதிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது Jianguo Pro 3 எனப்படும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது இரு பதிப்புக்களாக வெளியாகியுள்ளது.

ஒன்று பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்துடனும், மற்றையது 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகத்துடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் விலையானது 29,000 இந்திய ரூபாய்களாகவும், 36,000 இந்திய ரூபாய்களாகவும் காணப்படுகின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers