புதிய லோகோவை அறிமுகம் செய்கின்றது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

ஒரு தனி நிறுவனமாக உருவாகியிருந்த பேஸ்புக் ஆனது தற்போது மேலும் சில நிறுவனங்களை கொள்வனவு செய்து பல்வேறு சேவையினை வழங்கிவருகின்றது.

இவற்றுள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற மேலும் சில நிறுவனங்களும் அடங்கும்.

எவ்வாறெனினும் இவற்றின் பிரதான நிறுவனமாக தற்போது பேஸ்புக்தான் திகழ்கின்றது.

ஆனால் ஏனைய சேவைகள் தொடர்ந்தும் முன்பிலிருந்த நிறுவனங்களில் பெயரிலேயே வழங்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் அனைத்து சேவைகள் மற்றும் வியாபாரங்களை ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவர பேஸ்புக் தீர்மானித்துள்ளது.

இதற்காக அனைத்து சேவைகளிலும் பேஸ்புக் எனும் நாமத்தையும் பயன்படுத்தவுள்ளது.

அத்துடன் பேஸ்புக் எனும் லோகோவை ஒவ்வொரு சேவைகளுக்கும் ஏற்ற வகையில் நிற மாற்றத்துடன் பயன்படுத்தவும் உள்ளது.

இதனை பேஸ்புக் நிறுவனமே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்