அறிமுகமாகியது நோக்கியா 6.2 கைப்பேசி: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

நோக்கியா நிறுவனம் அண்மையில் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் நோக்கிய 6.2 எனும் குறித்த கைப்பேசியினை தற்போது அமெரிக்காவிலும் அறிமுகம் செய்துள்ளது.

நரை நிறம் மற்றும் கறுப்பு வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடையதும், FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான IPS LCD திரையினை கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 636 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

தவிர 3 மாத காலத்திற்கு 100GB வரையான இலவச கிளவுட் சேமிப்பு வசதியும் இக் கைப்பேசியுடன் தரப்படுகின்றது.

அத்துடன் 16 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை கொண்ட 3 பிரதான கமெராக்களையும், 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது 249 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்