பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டு உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது புதிய முகப்பு தோற்றத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தகவலை கூகுள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பயனர்கள் வீடியோக்களை இலகுவாக தேடும்பொருட்டே முகப்பு தோற்றத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது முன்னையதை விடவும் பெரிய Thumbnail மூலம் வீடியோக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் வீடியோக்களுக்கான தலைப்புக்கள் நீளமானதாக இருந்தாலும் அவை முழுவதுமாகக் காண்பிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
எவ்வாறெனினும் இம் மாற்றமானது டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் சாதனங்களில் மாத்திரமே கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.