நோக்கியா நிறுவனம் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அன்ரோயிட் தொலைக்காட்சி வடிவமைப்பிலும் காலடி பாதித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த தொலைக்காட்சியினை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளது.
இத் தொலைக்காட்சியானது 55 அங்குல அளவுடையதும், 3840 x 2160 Pixel Resolution உடையதுமான 4K தொழில்நுட்பத்தினாலான திரையினைக் கொண்டுள்ளது.
மேலும் இதில் PureX quad-core processor, பிரதான நினைவகமாக 2.25GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
அன்ரோயிட் 9 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இத்தொலைக்காட்சியில் WiFi, Bluetooth 5.0 மற்றும் 3 HDMI துறைகள் உட்பட மேலும் பல வசதிகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது 588 டொலர்களாக இருப்பதுடன் இந்திய ரூபாயில் 41,999 ஆக காணப்படுகின்றது.