கிளவுட் ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும் UC Browser

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

Alibaba Digital Media and Entertainment Group இனால் அறிமுகம் செய்யப்பட்ட இணைய உலாவியே UC Browser ஆகும்.

கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் போன்று பிரபல்யம் இல்லாவிட்டாலும் பல இலட்சக்கணக்கானவர்கள் இவ் உலாவியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னணி உலாவிகளில் தரப்படாத புதிய வசதியை கொண்டு தற்போது UC Browser இன் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் UC Drive எனும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி தரப்பட்டுள்ளது.

இதனால் மொபைல் சாதனங்களில் தரவிறக்கம் செய்யப்படும் படங்கள், வீடியோக்கள், பாடல்கள் போன்றவற்றினை இக் கிளவுட் ஸ்டோரேஜ்ஜில் சேமிக்க முடியும்.

மாறாக மொபைல் சாதனங்களின் சேமிப்பு நினைவகங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது அனைத்து UC Browser பயனர்களும் 20GB வரையான கிளவுட் ஸ்டோரேஜினை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்