மற்றுமொரு புதிய அன்ரோயிட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது நோக்கியா

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

நோக்கியா நிறுவனத்தின் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.

இதனையடுத்து தொடர்ச்சியாக புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வரிசையில் Nokia 5.3 எனும் மற்றுமொரு புதிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.55 அங்குல அளவு, 1600 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் Qualcomm Snapdragon 665 mobile processor, பிரதான நினைவகமாக 3GB, 4GB, 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய Wide கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய மைக்ரோ கமெரா, மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டெப்த் (Depth) கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...