எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்தது மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின் இந்த வருடத்திற்கான பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

Build 2020 எனும் மாநாட்டில் இப் புதிய உலாவியானது அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இப் பதிப்பில் Pinterest ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், Sidebar Search வசதியும் தரப்பட்டுள்ளது.

தற்போது Pinterest தளமானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றமையினால் தேடலுக்கான பெறுபேறுகளை Pinterest தளத்திலிருந்தும் பயனர்களுக்கு வழங்குவதற்காக இவ் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று Sidebar Search வசதியும் பயனர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இணைப்பு ஒன்றினை கிளிக் செய்யும்போது இணைய உலாவியின் கணக்கினுள் உள்நுழைய வேண்டிய தேவை இருப்பின் தானாகவே செயற்படு நிலையில் உள்ள கணக்கிற்கு மாறக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்