விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ வாட்சின் சிறப்பம்சங்கள்!

Report Print Kavitha in அறிமுகம்

ஒப்போ நிறுவனம் தனது வியர் ஒஎஸ் கொண்ட ஒப்போ வாட்ச் மாடலை ஜூலை 31 ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது.

இதில் பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எடிஷன், குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2500 சிப்செட் ,கூகுள் வியர் ஒஎஸ் இயங்குதளம், வாட்ச் வூக் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் போன்றவை உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அதுமட்டுமின்றி வாட்ச் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகமாக வழங்கும் திறனையும் இதன் பேட்டரியை 1 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 17 நிமிடங்களை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஒப்போ வாட்ச் மாடலில் வியர் ஒஎஸ் 4100 வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்